சினிமா காதல் – உறவுகள்

என் சாவிற்கு இவர்தான் காரணம்! விஷம் குடித்தபடியே செல்பி வீடியோ! துடிதுடித்து உயிரிழந்த பிரபல இளம்நடிகை!

Summary:

Cannada serial actress commit suicide

பெங்களூரு சுத்தகுண்டே பாளையா பகுதியில், கிருஷ்ணமூர்த்தி லே-அவுட் என்ற பகுதியில் வசித்து வந்தவர் நடிகை சந்தனா. 29 வயது நிறைந்த இவர் கன்னட தனியார் தொலைக்காட்சிகளில் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். மேலும்  சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சந்தனா கடந்த சில ஆண்டுகளாக தினேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இருகுடும்பத்தாருக்கும் தெரியவந்த நிலையில் அவர்களும் சம்மதம் தெரிவித்து தினேஷ் மற்றும் சந்தனாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில் நடிகை சந்தனா திடீரென்று விஷம்குடித்து, வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடியநிலையில் கிடந்துள்ளார். அதனை கண்ட குடும்பத்தினர்கள் பதறியடித்தபடி அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி சந்தனா உயிரிழந்தார். இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்ததில், தற்கொலைக்கு முன்பு சந்தனா பேசிய வீடியோ ஒன்று இருந்தது. அதில் தனது தற்கொலைக்கு காரணம் தினேஷ் தான். அவர் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை எனக் கூறிக் கொண்டே விஷத்தை குடிக்கிறார்.
மேலும் விசாரணையில் தினேஷ் 5 லட்சத்திற்கும் மேல் சந்தனாவிடமிருந்து வாங்கியதாகவும், திருமணம் செய்து கொள்ளாமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியதால்தான் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.


Advertisement