புது ரூல்ஸ்... இனி தளபதி மட்டும் தான்... மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பறந்தது கட்டளை.!

புது ரூல்ஸ்... இனி தளபதி மட்டும் தான்... மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பறந்தது கட்டளை.!



call-him-as-thalapathy-bussy-ananth-order-to-vijay-makk

தமிழ் சினிமாவில் இன்று சூப்பர் ஸ்டாரின் உயரத்தையே தொட்டுவிட்ட ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். இவர் தனது 67-வது திரைப்படம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார்.

சமீப காலமாகவே விஜய் அரசியலில் களமிறங்குவதற்காக அனைத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இதன் முதல் படியாக தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றியமைத்தார். மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் இரண்டு மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் வழங்கி பாராட்டினார்.

thalapathy vijayஇந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக சென்னையில் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். மேலும் இவர் தளபதி விஜய் தளபதி என்று மட்டும் தான் அழைக்க வேண்டும் என்றும் அவர் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது எனவும் கட்டளையிட்டு இருக்கிறார்‌.

thalapathy vijayஇந்த மகளிர் அணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மகளிர் அணி நிர்வாகி ஒருவர் தளபதி விஜய் என அவர் பெயரை சொல்லி அழைத்தார். அப்போது குறுக்கிட்ட புஸ்ஸி ஆனந்த் தலைவர் விஜயை தளபதி என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது எனவும் அன்பு கட்டளை இட்டிருக்கிறார்.