நடிகை சமந்தாவிற்காக படப்பிடிப்பில் காதலனுடன் சேர்ந்து நயன்தாரா செய்த காரியம்! அட.. இவரும் இருக்காரா! வைரலாகும் புகைப்படங்கள்!!

நடிகை சமந்தாவிற்காக படப்பிடிப்பில் காதலனுடன் சேர்ந்து நயன்தாரா செய்த காரியம்! அட.. இவரும் இருக்காரா! வைரலாகும் புகைப்படங்கள்!!


cake cutting celebration for samantha in shooting spot

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ளார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

தற்போது சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. 

 இதற்கிடையில் இறுதியாக சமந்தா ஃபேமிலி மேன் 2 என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். இந்த தொடர் பல சர்ச்சைகளை சந்தித்தாலும், இதில் சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. மேலும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவின் வெப்சீரிஸ் பிரிவில் சிறந்த நடிகையாக சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவுக்கு கேக் வெட்டி படக்குழுவினர்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  மேலும் அப்பொழுது உடன் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன்  ஆகியோர் இருந்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.