தமிழகம்

இந்த காலத்திலும் இப்படியொரு அண்ணன், தம்பியா?? மனதை உறையவைக்கும் சோக சம்பவம்!!

Summary:

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்த வக்காரமாரி  பகுதியில் வசித்து வந்தவர் 71 வயது

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்த வக்காரமாரி  பகுதியில் வசித்து வந்தவர் 71 வயது நிறைந்த வீரமணி. இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது தம்பி குணசேகரன். அவர் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இருவரது குடும்பத்தினரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் அண்மையில் வீரமணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடனடியாக வீரமணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக  தெரிவித்துள்ளனர்.

தனது அண்ணன் இறந்த செய்தி கேட்டதும் குணசேகரன் கதறி அழுதுள்ளார். இந்நிலையில் அவருக்கும் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து இருவரது உடல்களும்  வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு ஒன்றாக வைத்து இருவருக்கும் இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பல காரணங்களுக்காக அண்ணன் தம்பி சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து செல்லும் இந்த காலத்தில் அண்ணன் இறந்த அடுத்த கணமே தம்பி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement