
மணமகன் ஒருவர் போட்டோ எடுப்பவரை அடிக்கும் வீடியோ காட்சி ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளிய
மணமகன் ஒருவர் போட்டோ எடுப்பவரை அடிக்கும் வீடியோ காட்சி ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி வைரலானது.
சில நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோ ஒன்றில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் போட்டோகிராபர் ஒருவர் மணமகன் மற்றும் மணமகளை போட்டோ எடுத்துக்கொண்டிருப்பார். பின்னர் மாப்பிளையை தனியாக நிற்கவைத்துவிட்டு, மணமகளை மட்டும் சுத்தி சுத்தி போட்டோ எடுப்பது, பெண்ணின் முகத்திலும் கைவைத்து அவரை சரி செய்து கொண்டு போட்டோ எடுப்பதுமாக இருப்பார்.
இதனை பார்த்து கடுப்பாகும் மணமகன் அந்த போட்டோ எடுப்பவரை மனமேடையிலையே வைத்து முதுகில் அடிப்பார். மேலும் இதனை பார்க்கும் மணப்பெண் மேடையிலே விழுந்து விழுந்து சிரிப்பார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி செம வைரலானது. மேலும் பலரும் அந்த போட்டோகிராபர் பாவம் என கமெண்ட் செய்துவந்தனர்.
இந்நிலையில் அந்த வீடியோ குறித்த உண்மை தகவல் தற்போது வெளியவந்துள்ளது. ஆம், அந்த வீடியோ சினிமா படப்பிடிப்பு ஒன்றிற்காக எடுக்கப்பட்டதாம். அந்த வீடியோவில், மணப்பெண் கோலத்தில் நிற்பவர் பெயர் அனிக்ரித்தி சவுகான் ஆகும். சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளம் நடிகையான இவர், அந்த வீடியோ தான் நடித்துவரும் ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த காட்சியை இணையத்தில் பகிர்ந்து, அதை ட்ரெண்ட் செய்ததற்காக அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ளார் அனிக்ரித்தி சவுகான்.
Advertisement
Advertisement