நயன்தாராவின் அன்னபூரணி படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்.. கலக்கத்தில் படக்குழு.!

நயன்தாராவின் அன்னபூரணி படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்.. கலக்கத்தில் படக்குழு.!


Brahmins against annaboorani movie

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை ஜி ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்க, லேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கியிருந்தார்.

nayanthara

மேலும் இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சுரேஷ் சக்கரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி , சத்யராஜ் கார்த்திக் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஐயர் வீட்டு பெண்ணான நயன்தாரா பல தடைகளை கடந்து பிரபல சமையல் கலைஞரானார் என்பது படத்தின் மூலக்கதையாகும்.

இந்த படத்தில் சமையல் மற்றும் பெண் சுதந்திரம் இரண்டையும் மையப்படுத்தி உருவாகி இருப்பதால் பெண் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.   இந்த நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்து மகா சபா எச்சரிக்கை விடுத்துள்ளது.

nayanthara

அதன்படி, பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் அன்னபூரணி திரைப்படத்தின் கதையம்சம் உள்ளது. இந்தப் படத்தை இயக்கிய நிலேஷ் கிருஷ்ணா என்பவரையும், படத்தில் நடித்த நயன்தாராவையும் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் தமிழகம் முழுவதும் முற்றுகையிடப்படும் என்று எச்சரித்துள்ளனர்.