புதுச்சேரி முதல்வரை சந்தித்த போனி கபூர்... ஏன், எதற்கு தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்...

புதுச்சேரி முதல்வரை சந்தித்த போனி கபூர்... ஏன், எதற்கு தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்...


Boney Kapoor met pandichery CM

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் போனி கபூர். இவர் தமிழில் தல அஜித்தை வைத்து நேர் கொண்ட பார்வை என்ற படத்தை தயாரித்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து மீண்டும் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்தார். தற்போது மீண்டும் அஜித்தின் 61 படத்தையும் அவரே தயாரிக்கிறார். அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை தயாரித்து வருவதால் போனி கபூர் தல ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.

Pandichery CM

இந்நிலையில் தற்போது போனி கபூர் மரியாதை நிமித்தமாக பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்துள்ளார். இது சம்பந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.