நடிகை ராதிகா தங்கியிருந்த ஹோட்டலில் குண்டுவெடிப்பு! அதிர்ச்சி சம்பவம்!

நடிகை ராதிகா தங்கியிருந்த ஹோட்டலில் குண்டுவெடிப்பு! அதிர்ச்சி சம்பவம்!


bomb blast in actress Rathika stayed hotel

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. 

இந்தநிலையில், இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றபோது குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இதில் பலா் உயிாிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என அடுத்தடுத்து 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புகளில் 100 க்கு மேலானோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் குண்டுவெடிப்பு நடந்த Cinnamongrand ஹோட்டலில் நடிகை ராதிகா தங்கியிருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். 

இது குறித்து அவரின் டுவிட்டர் பதிவில், இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது, கடவுள் எங்களுடன் இருங்கள். நான் கொழும்பில் உள்ள Cinnamongrand ஹோட்டலில்  இருந்து புறப்பட்ட பின்னர் அங்கு குண்டு வெடித்துள்ளது, இதை நம்ப முடியவில்லை அதிர்ச்சியாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.