" பார்த்திபன் சார் பொய் சொல்லாதீங்க" பார்த்திபனை பதிவின் மூலம் சீண்டிய ப்ளூ சட்டை மாறன்..

" பார்த்திபன் சார் பொய் சொல்லாதீங்க" பார்த்திபனை பதிவின் மூலம் சீண்டிய ப்ளூ சட்டை மாறன்..


blue-sattai-maran-posted-about-parthiban

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற 'மாயவா தூயவா' பாடலைப் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

parthiban

இதுகுறித்துப் பேசிய பார்த்திபன், " 120 சர்வதேச விருதுகள் வென்றாலும், நம் தேசிய விருதுக்கு ஈடாகாது" என்று கூறியிருந்தார். இதற்கு வம்பிழுக்கும் பொருட்டு ப்ளூ சட்டை மாறன், " நீங்கள் வாங்கிய 120 சர்வதோசை விருதுகளை யார் வழங்கினார்கள்? 

நாங்கள் தான் விருது தந்தோம் என்று அவர்கள் கூறுவார்களா?அந்த சான்றிதழ்களை நீங்கள் காட்டுவீர்களா? 120ல் ஒன்று குறைந்தாலும் நீங்கள் சொன்னது பொய் என்றாகிவிடும்" என்று தன் பதிவில் கூறியிருக்கிறார். 

parthiban

இவருக்கும், பார்த்திபனுக்கும் ஏற்கனவே இரவின் நிழல் படத்திற்கு, ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்ததில் பிரச்சனை இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது மீண்டும் பார்த்திபனை ப்ளூ சட்டை மாறன் இப்பதிவின் மூலம் சீண்டியிருக்கிறார்.