புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
இயக்குனர் வம்சிக்கு புளூ சட்டை மாறன் அல்டிமேட் லெவல் அட்வைஸ்.. என்ன சொன்னார் தெரியுமா?..!
பொங்கல் 2023 பண்டிகையையொட்டி விஜயின் நடிப்பில் வாரிசு, அல்டிமேட் சூப்பர்ஸ்டார் தல அஜித் குமாரின் நடிப்பில் துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், அவரின் ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு ஒருவரின் இறப்பு, படுகாயம் தொடர்பான செய்திகள் எதிர்மறை பிரச்சனையை எதிர்கொள்ள வைத்தது. வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை தொடர்ந்து சந்திக்கிறது.
திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "லோகேஷ்கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், "எங்கள் கடின உழைப்பு இருந்ததால், நாங்கள் கோடிகளில் சம்பளம் வாங்குகிறோம். மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.. ஆனால் ரூ.2000 மட்டுமே சம்பாதிப்பவர்கள் படங்களுக்கு ரூ.200 ஒதுக்கி வைக்கிறார்கள்.. அதை நாம் அதிகம் மதிக்க வேண்டும்" என தெரிவித்தார். வம்சி இதை கவனத்தில் கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.
#LokeshKanagaraj in a recent interview said "At the end of the day, despite all of our hardwork we are paid in crores and are very fortunate people but people who barely make 2000 are keeping aside 200 for films and we should value that a lot more".
— Blue Sattai Maran (@tamiltalkies) January 17, 2023
Vamsi... Take note of it.
அதாவது, நீங்கள் கோடிகளில் புரண்டாலும், உங்களை நம்பி ரூ.200 கொடுத்து படம் பார்க்கும் சாமானியனின் வருமானம் என்பது மாதத்திற்கே அல்லது வாரத்திற்கே ரூ.2000 தான். ஆகையால் அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். அதனை மதிக்க வேண்டும் என்பதை வம்சி புரிந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதன்வாயிலாக வாரிசு படம் அவரின் பார்வைக்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.