ஓடிடியில் வெளியாகும் திரிஷாவின் பிருந்தா.! எப்போ? எத்தனை மொழிகளில் தெரியுமா??Birintha webseries stream from auguest 2

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் படங்களில் நடித்து தற்போது வரை முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை திரிஷா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

திரிஷா நடித்த படங்கள் 

திரிஷா நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன், லியோ போன்ற படங்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமாக வலம் வருகிறார். அவரது கைவசம் தற்போது கமல்ஹாசனுடன் 'தக்லைஃப்', அஜித்துடன் 'விடாமுயற்சி' சிரஞ்சீவியுடன் 'விசுவாம்பரா', மோகன்லாலுடன் 'ராம்', மற்றும் டொவினோ தாமஸ் உடன் 'ஐடெண்டிட்டி' போன்ற படங்கள் உள்ளன.

இதையும் படிங்க: என்னங்கையா இது... அந்த ஆசைக்கு விஜய்யை பயன்படுத்துகிறார் த்ரிஷா.!! சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா.!!

ரிலீசாகும் பிருந்தா வெப்சீரிஸ் 

இந்த நிலையில் திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் பிருந்தா என்ற வெப் தொடர் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல்
சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களத்துடன் அமைந்திருக்கும் இத்தொடரை சூர்யா வங்களா இயக்கியுள்ளார். மேலும் இதில் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமானி, ரவிந்திர விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி போன்ற பல மொழிகளிலும் வெளியாகவுள்ளது

இதையும் படிங்க: "ஒரே அப்பார்ட்மெண்டில் விஜய் & த்ரிஷா."? உண்மையான காரணம் இதுதான்.!!