பிகில் இசை வெளியீட்டு விழா மூலம் டி. ஆர்.பியில் முதல் இடத்தை பிடித்த சன் டிவி! இத்தனை கோடி பார்வையாளர்களை கடந்ததா - ஆதாரம் இதோ.

பிகில் இசை வெளியீட்டு விழா மூலம் டி. ஆர்.பியில் முதல் இடத்தை பிடித்த சன் டிவி! இத்தனை கோடி பார்வையாளர்களை கடந்ததா - ஆதாரம் இதோ.


bikil-sun-tv

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை அடுத்து மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இந்நிலையில்  பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.

Bikil

அதில் நயன்தாரா தவிர அனைத்து பிரபலங்களும் கலந்துகொண்டு பேசினர். அதனை தொடர்ந்து பிகில் இசைவெளியீட்டு விழா பிரபல தொலைக்காட்சியான சன்டிவியில் ஒளிபரப்பபட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் சன் டிவி 12.86 டிஆர்பி புள்ளிகள் பெற்றும் 9,5,94,000 பார்வையாளர்களை கடந்தும் சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரு பாடல் வெளியீட்டு விழாவுக்கு அதிகமாக கிடைத்த டிஆர்பி புள்ளிகள் இதுவாக தான் இருக்கும்.