சினிமா

பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் வந்த கெட்டப்பை பாத்தீங்களா? புகைப்படம் இதோ.

Summary:

Bikil audio launch vijay getup photos

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை அடுத்து மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். படம் முழுவதும் விளையாட்டை மையமாக கொண்ட ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

AR ரஹ்மான் படத்திற்கு இசை அமைத்துள்ளார். சிங்கப்பெண்ணே, வெறித்தனம் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றநிலையில் இன்று படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசினார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவிற்கு வித்தியாசமான கேர் ஸ்டைல், தாடியுடன் மிரட்டலான தோற்றத்தில் வந்துள்ளார் தளபதி விஜய். இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய்யின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
 


Advertisement