சினிமா

பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு என்ன ஆனது! ஏன் இப்படி ட்வீட் செய்துள்ளார்? குழப்பத்தில் ரசிகர்கள்.

Summary:

Bigil producesor archana kalpathi

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக உருவாகியுள்ள படம் தான் பிகில். அட்லீ நடிகர் விஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவி வருகிறது.

ஏ. ஜி. எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பல மில்லியன் ரசிகர்கள் கடந்துள்ளது.

இந்நிலையில் தற்போது பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மனவருத்துடன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிகில் படத்தின் சாதனைகளைப் பாராட்டியதற்கு நன்றி. 

மேலும் அவர் நான் பல பேட்டிகளில் கூறுயதை போலவே தயாரிப்பாளர்கள் எப்போதுமே பெயரற்றவர்களாகவும், முகமற்றவர்களாகவுமே இருக்கிறார்கள் என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.


Advertisement