சினிமா

வாவ்.. பிகில் பாண்டியம்மாதானா இது! மாலையும், கழுத்துமாக மணக்கோலத்தில் அழகோ அழகு! மெய்மறந்த ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக களம் இறங்கி தனது திறமையால் முன்னேறி, பின்னர

தமிழ் சினிமாவில் டிவி நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக களம் இறங்கி தனது திறமையால் முன்னேறி, பின்னர் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் அசத்தி தற்போது பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரோபோ சங்கர். இவரது மூத்த மகள்தான் இந்திரஜா.

இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் செம பிரபலமாகி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.  பிகில் படத்தில் இவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும், தான் வரும் காட்சிகள் அனைத்தையும் தனக்கான களமாக மாற்றி அனைவரையும் கவர்ந்தார்.

பிகில் பாண்டியம்மாவான இந்திரஜா சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்க கூடியவர். மேலும் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும், டிக்டாக் வீடியோக்களையும் வெளியிடுவார். இந்த நிலையில் இந்திரஜா தற்போது மணப்பெண் போல புடவை மற்றும் நகை அணிந்து, மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் இருப்பதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் பிகில் பாண்டியம்மாவா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement