சினிமா

தொடரும் கொடூரங்கள்! தளபதி சொன்னதுபோல செய்யுங்கள்! கண்டிப்பா உதவும் .. பிகில் படநடிகை விடுத்த வேண்டுகோள்!

Summary:

Bigil movie actress request to follow thalapathi speech

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் டூ வீலர் பஞ்சரான நிலையில், அவருக்கு உதவுவதுபோல தாமே முன்வந்த லாரி டிரைவர்கள் 4பேர் அவரை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று, வாயில் மதுவை ஊற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் ப்ரியங்காவை  கொடூரமாக எரித்து கொன்றுள்ளனர் .

இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, நவீன் மற்றும் சிறுவர்களான ஷிவா, சின்ன கேசவலு  ஆகிய நால்வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட மருத்துவரின் உண்மையான பெயரை இனி பயன்படுத்தக்கூடாது என்றும் திஷா என்ற பெயரில் தான் அவரை குறிப்பிட வேண்டும் என்றும் ஹைதராபாத் காவல் ஆணையர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொடூர இந்த கொடூர சம்பவத்திற்கு பல தரப்பினரும், திரையுலக பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 

இந்நிலையில் இதற்கு பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக,  விஜய்யுடன் நடித்த நடிகை வர்ஷா கண்டனம் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து பெண்களும் தங்களது பாதுகாப்பிற்காக  பெப்பர் ஸ்ப்ரே வாங்கிவைத்து கொள்ளவேண்டும். மேலும் தளபதி சொன்னதுபோல முக்கியமான ஹாஸ்டாக்குகளை பகிருங்கள்,  அது சமூகத்திற்கு கண்டிப்பாக  உதவியாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். 


Advertisement