சினிமா

என்னது.. பிகில் பட நடிகைக்கு திருமணம் முடிஞ்சாச்சா! மாப்பிள்ளை இவர்தானா! வைரலாகும் புகைப்படங்கள்!!

Summary:

என்னது.. பிகில் பட நடிகைக்கு திருமணம் முடிஞ்சாச்சா! மாப்பிள்ளை இவர்தானா! வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் பிகில். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம்  பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரெபா மோனிகா. இப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தை ஏற்று நடித்த இவரை அனைவரும் பாராட்டினர். 

இதனைத் தொடர்ந்து ரெபா மோனிகா ஹரிஷ் கல்யாணுடன் தனுசுராசி நேயர்களே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் தற்போது அவரது கைவசம் எப்ஐஆர், மழையில் நனைகிறேன் போன்ற படங்கள் உள்ளன. அவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ரெபா மோனிகா பிக்பாஸ் அஸ்வினுடன் இணைந்து நடித்திருந்த குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் ரசிகர்களிடையே செம ரீச்சானது.

இந்நிலையில் ரெபா மோனிகா தன் நீண்ட நாள் காதலனான ஜோமன் ஜோசப் என்பவரை கடந்த ஜனவரி 9ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அவரது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.


Advertisement