சினிமா

பிகில் பட தயாரிப்பாளர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை! பறிமுதல் செய்யப்பட்டது மட்டும் இத்தனை கோடியா!

Summary:

Bigil movie

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக கடந்த தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் தான் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இதுவரை மட்டும் வசூலில் 300 கோடியை தாண்டியதாகவும் தகவல் வெளியானது. அதே நேரத்தில் அட்லீ பட்ஜெட்டை அதிகப்படுதியதால் ஒரு சில இடங்களில் நஷ்டம் அடைந்ததாக கே. ராஜன் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது திடீரென அப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனை செய்யப்பட்டது. அப்போது கணக்கில் வராத 24 கோடி பணமும், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 


Advertisement