மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
அசீமை கடுமையாக கண்டித்த கமல் ஹாசன்... இதுதான் உங்க ஸ்டேடர்ஜியா?.. இன்னைக்கி ஒரு சம்பவம் பார்சல்..!
தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது 6வது சீசனில் அடியெடுத்து வைத்து 5 வாரங்கள் கடந்துவிட்டன. இதனால் போட்டியாளர்கள் விறுவிறுப்போடு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பிக் பாசில் தொகுப்பளராக இருந்து வரும் கமல் ஹாசன் அசீமை வன்மையாக கண்டித்து இருக்கிறார். அசீம் மன்னர் குடும்பம் டாஸ்கில் படைத்தளபதியாக செயல்பட்டு வந்த தருணத்தில், சாவியை ஏ.டி.கேவிடம் கொடுத்து பாதுகாப்பாக வைக்க சொல்லி இருந்தார்.
அதனை அவர் பாதுகாக்க தவறினார் என குற்றசாட்டை முன்வைத்து ஏ.டி.கே-வின் கோபத்தை கிளப்பி அசீம் பிக் பாஸ் வீட்டினை ரணகளமாக்கி இருந்தார். இந்த விசயத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள கமல் ஹாசன், நீங்கள் நினைப்பது போல அனைத்தும் நடைபெறாது என கூறுகிறார்.
ஞாயிற்றுக்கிழமையான இன்று ஒருவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவர் என்ற வகையில், கமல் தனது உச்சகட்ட கண்டனத்தை அஸீமிடம் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.