ஷாக்.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறத்துடிக்கும் ஜி.பி.முத்து.. இதுதான் காரணமா?.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!!Biggboss gpmuthu sad About his home

 

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் 6-வது சீசன் அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கியதை தொடர்ந்து, மக்களுக்கு அதிக பரிச்சயம் இல்லாத சமூகவலைத்தளத்தின் மூலம் பிரபலமான பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் டிக்டாக், யூட்யூபின் மூலம் மக்களிடையே பெரிய அளவில் பிரபலமடைந்தவர் ஜி.பி.முத்து. இவர் இணையதளங்களில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். மேலும் இந்த பிக்பாஸ் சீசனில் மக்களை பெருமளவில் கவர்ந்த போட்டியாளராகவும் இருக்கிறார்.

அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து வெளியேற நினைக்கும் நிலையில், கடந்த சில நாட்களாகவே அவரை பிக்பாஸ் வீட்டில் சந்தோஷமாக பார்க்க முடிவதில்லை. தனது பிள்ளைகளை பார்க்க வேண்டுமென அவர் சோகத்துடன் கூறி வருகிறார்.

மேலும் அவர் தனது சகோதரர் ஆனந்திடம் பிக்பாஸ் வீட்டில் இருந்து தன்னை வெளியேற உதவி செய்யுமாறு வேண்டுகோள் வைத்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் சோகத்துடன் "தலைவரே வீட்டை விட்டு போகாதீங்க" என்று கூறி வருகின்றனர்.