சேலத்தில் நடந்த ஜாதிய விவகாரத்தை விசிக கண்டுகொள்ளாதது ஏன்?.. நடிகை கஸ்தூரி பரபரப்பு குற்றச்சாட்டு..!
ஷெரின் கெஞ்சி கேட்டும் செய்யாததை லாஷ்லியா கேட்காமலே செய்த பிக்பாஸ்! வருத்தத்தில் ரசிகர்கள்.
ஷெரின் கெஞ்சி கேட்டும் செய்யாததை லாஷ்லியா கேட்காமலே செய்த பிக்பாஸ்! வருத்தத்தில் ரசிகர்கள்.

கடந்த நூறு நாட்களுக்கு மேலாக நடந்துவந்த பிக்பாஸ் சீசன் மூன்று இன்றுடன் முடிவடைந்துள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் லாஷ்லியா, ஷெரின், முகேன் மற்றும் சாண்டி ஆகிய நால்வர் மட்டும் இறுதி வாரத்திற்கு தேர்வாகினர்.
இதில் பிக்பாஸ் சீசன் மூன்றின் இறுதி நாளான இன்று முதல் ஆளாக ஷெரின் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். சீசன் இரண்டின் போட்டியாளர் ரித்விகா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து ஷெரினை அழைத்து சென்றார்.
ஷெரின் வீட்டில் இருந்து வெளியேறும் முன்பு தன்னிடம் ஏதாவது பேசுங்கள் பிக்பாஸ் என்று கெஞ்சி கேட்டார். பிக்பாஸ் தன்னிடம் ஏதாவது பேசுவார் என்று சற்று பொறுத்திருந்து பார்த்துவிட்டு அவர் பேசவில்லை என்றதும் வீட்டில் இருந்து கிளம்பினார் ஷெரின்.
ஷெரினை அடுத்து லாஷ்லியா இரண்டாவது ஆளாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். லாஷ்லியா வீட்டில் இருந்து வெளியேறும்போது அவர் கேட்கமலையே அவர்க்கு வாழ்த்து கூறி அனுப்பினார் பிக்பாஸ். ஷெரின் அவ்வளவு கெஞ்சி கேட்டும் செய்யாததை லாஷ்லியா கேட்காமலையே செய்துள்ளார் பிக்பாஸ்.
மிகவும் போராடி போட்டியின் இறுதி வரை வந்த ஷெரினுக்கு பிக்பாஸ் ஒரு வாழ்த்து கூட சொல்லாதது ஷெரின் ரசிகர்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.