முதல் முறையாக கண்ணீர் சிந்திய வனிதா! பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த நெகிழ்சியான காட்சி.

முதல் முறையாக கண்ணீர் சிந்திய வனிதா! பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த நெகிழ்சியான காட்சி.


Bigg boss vanitha cries at yesterday show

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் 3 இதுவரை 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.

கடந்த வாரம் எலிமினேஷன் உண்டு என கூறிய கமல் இயக்குனர் சேரன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக கூறினார். அதன்பின்னர் அவருக்கு சீக்ரெட் ரூம் செல்லும் வாய்ப்பை வழங்கினார் பிக்பாஸ். இந்நிலையில் சேரன் வீட்டில் இருந்து வெளியேறும்போது சக போட்டியாளர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தினர்.

bigg boss tamil

லாஷ்லியா சேரனின் கையை பிடித்து கதறி அழுதார். இதில் கவனிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் மற்றவர்கள் அழும்போது அழுது சீன் போடவேண்டாம், ஏன் அழுகுறீர்கள் என கேள்வி கேட்டு வந்த வனிதா முதல் முறையாக நேற்று கண் கலங்கி அழுதார்.

சேரன் என்ன தவறு செய்தார்? அவர் ஏன் வெளியே செல்லவேண்டும்? இங்கு நடப்பது எல்லாமே தப்பா இருக்கு என கூறி அழுதார் நடிகை வனிதா.