பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள சிறு குழந்தைகள்! யாருடைய குழந்தைகள் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களே மீதம் உள்ள நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல அணைத்து போட்டியாளர்களும் ஆர்வமுடன் விளையாடிவருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கின்றன.
இதற்கு முன்னர் முகெனின் தாய் மற்றும் சகோதரி வந்ததை அடுத்து நேற்று லாஷ்லியாவின் பெற்றோர் மற்றும் சகோதரிகள் வந்திருந்தனர். இதனை அடுத்து இன்று வனிதாவின் மகள்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்னனர். குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது, ஓடிப்பிடித்து விளையாடுவது என பிக்பாஸ் வீடே கலகலப்பாக உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தர்சனின் அம்மா மற்றும் சகோதரியும் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்னனர். அவர்கள் கேக் வெட்டி கொண்டாடும் காட்சிகளும் வீடியோவாக வெளியாகி வைரலாகிவருகிறது.
#Day81 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/nl2FFNYoAK
— Vijay Television (@vijaytelevision) September 12, 2019
#Day81 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/bCHMQiFG6H
— Vijay Television (@vijaytelevision) September 12, 2019