இந்த இரண்டு பிரபல போட்டியாளர்கள் மட்டும் பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சிக்கு வரவில்லை! யார் யார் தெரியுமா?

கடந்த 100 நாட்களுக்கு மேலாக நடந்த பிக்பாஸ் சீசன் மூன்று இன்றுடன் முடிவடைகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் லாஷ்லியா, முகேன், சாண்டி மற்றும் ஷெரின் ஆகிய நால்வரும் இறுதி வாரத்திற்கு தேர்வாகினர்.
இந்நிலையில் இன்று இறுதி நாள் என்பதால் இந்த சீஸனின் பழைய போட்டியாளர்கள் அனைவரும் இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஆனால் இந்த சீஸனின் இரண்டு போட்டியாளர்கள் மட்டும் இன்றைய இறுதி நாளில் கலந்துகொள்ளவில்லை.
அவர்கள் வேறு யாரும் இல்லை ஒருவர் ஜாங்கிரி மதுமிதா மற்றொருவர் பருத்திவீரன் சித்தப்பு சரவணன். பெண்களை இடிப்பதற்காக பேருந்தில் பயணம் செய்வேன் என அவர் கூறியதை காரணமாக வைத்து போட்டியின் இடைலையே அவர் வெளியேற்றப்பட்டார்.
தற்கொலை முயற்சி செய்து வீட்டை விட்டு வெளியேறிய மதுமிதா தனக்கு சம்பளம் தரவில்லை என்று விஜய் தொலைக்காட்சிக்கு எதிராக புகார் கூறினார். இவர்கள் இருவருமே விஜய் தொலைக்காட்சிக்கு எதிராக செயல்பட்ட நிலையில் இறுதி நாளில் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.