சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் போய் என்ன செய்யப்போகிறாய் என கேட்டவர்களுக்கு சேரன் கொடுத்த பதிலடி! இன்றைய ப்ரோமோ வீடியோ.

Summary:

Bigg boss ticket to finale

பிக்பாஸ் சீசன் மூன்று 85 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வார நாமினேஷனில் லாஷ்லியா, கவின், சேரன், ஷெரின் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதுஒருபுரம் இருக்க, டிக்கெட் டு பினாலே மூலம் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் தான்தான் முதல் இடம் என்று கூறி தன்னை முன்னிலை படுத்துகிறார் சேரன். இங்கு இருக்கும் அனைவரிலும் தான்தான் வயதில் பெரியவன் என்றும் அதிக அனுபவம் உடையவர் என்றும் கூறுகிறார் சேரன்.

மேலும், இங்கிருக்கும் அனைவர்க்கும் தனித்தனியே ஆர்மியினர், பாலோயர்ஸ் இருந்தாலும் அவர்கள் அனைவரும் எனக்கும் பாலோவர்ஸ் அதனால்தான் நான் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளதாக கூறியுள்ளார் சேரன். 


Advertisement