சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ்: வெளியானது இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல்! முழு விவரம் இதோ!

Summary:

Bigg boss this week nomination list

பிக்பாஸ் சீசன் மூன்று இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை வனிதா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிகழ்கிறது.

டிக்கெட் டு பினாலே என்ற டாஸ்க் மூலம் யார் வெற்றி பெருகிறாரோ அவர் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார் என பிக்பாஸ் அறிவித்துள்ளார். அதற்கான போட்டிகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இது ஒருபுறம் இருக்க இந்த வாரத்திற்கான நாமினேஷன் வேலையும் மறுபுறம் நடைபெறுகிறது.

இதில் கண்டிப்பாக என்னை யாரவது நாமினேட் செய்வார்கள் அதனால் சாண்டி மற்றும் கவினை தான் நாமினேட் செய்வதாக சேரன் கூறியுள்ளார். எனவே இந்த வார நாமினேஷன் பட்டியலில் கவின், லாஷ்லியா, ஷெரின் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று நாமினேட் ஆகியுள்ளனர்.


Advertisement