சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்! யார் அதிக ஓட்டு வாங்குனது தெரியுமா?

Summary:

Bigg boss this week nomination list

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்தவருகிறது. 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் பிக்பாஸ் பைனலுக்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளது. மொத்தம் 16 பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். நேற்றைய எலிமினேஷனில் இயக்குனர் சேரனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் சீக்ரெட் ரூமில் உள்ளார்.

இந்நிலையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்னனர். அதில், கடந்த வாரம் டாஸ்க் சரியாக செய்யாததால் கவின் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார். மேலும், லாஷ்லியா இந்த வார தலைவி என்பதால் அவரை நாமினேட் செய்ய இயலாது.

இதனை அடுத்து மீதம் உள்ள அணைத்து போட்டியாளர்களும் வனிதாவை நாமினேட் செய்துள்ளனர். அதன்படி வனிதா வெளியேறவேண்டும் என 6 பேரும், தர்ஷன் வெளியேற 2 பேர், ஷெரின் வீட்டை விட்டு வெளியேற 4 பேரும், சாண்டி வெளியேறவேண்டும் என 2 பேரும் நாமினேட் செய்துள்ளனர்.


Advertisement