பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 2வது வைல்டு கார்ட் போட்டியாளர்! அர்ச்சனாவின் ரியாக்சனை பாருங்க.

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 2வது வைல்டு கார்ட் போட்டியாளர்! அர்ச்சனாவின் ரியாக்சனை பாருங்க.


Bigg boss tamil wild card entry singer Suchithra viral video

பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்துள்ளார் பாடகி சுசித்ரா.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு 3 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சீசன்களை போல் இந்த சீசனிலும் சண்டை, சமாதானம், அழுகை, சற்று ரொமான்ஸ் என காரசாரமாக உள்ளது பிக்பாஸ் வீடு. 16 போட்டியாளர்களில் முதல் போட்டியாளராக நடிகை ரேக்கா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

Bigg boss

கடந்த வாரம் பாடகர் ஆஜித் வெளியேற இந்தநிலையில் அவர் தன்னிடம் இருந்த எவிக்சன் ப்ரீ பாஸை வைத்து தப்பித்துக்கொண்டார். இந்நிலையில் முதல் வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனாவுடன் சேர்த்து தற்போது 16 பேர் பிக்பாஸ் வீட்டில் விளையாடிவருகின்றனர். அதில் இந்தவாரம் பாடகர் வேல்முருகன் வெளியேறலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்துள்ளார் பாடகி சுசித்ரா. தமிழில் சினிமாவில் என்ற ஹிட் பாடல்களை பாடியுள்ள இவர் சற்று சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனாவால் போட்டியில் எந்த பரபரப்பும் ஏற்படாதநிலையில் சுசித்ரா வந்தபிறகு போட்டி மேலும் சூடுபிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையியல் பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் அவரை பார்த்து அர்ச்சனா கொடுக்கும் ரியாக்சன் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.