சினிமா

பார்த்ததும் பயங்கரமாக சிரிக்க தூண்டும் பிக் பாஸ் வைஷ்ணவியின் புகைப்படம்! என்ன கொடும சார் இது?

Summary:

Bigg boss tamil vaishanvi spider man dress

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது சீசனில் 
பதினாறு போட்டியாளர்களின் ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் RJ வைஷ்ணவி. இவர் வீட்டில் உள்ளவர்களை பற்றி புறணி பேசுவதால் மக்களால் வெறுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் தனது சக போட்டியாளர் ரம்யாவுடன் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார். அவர்களை பார்த்த அப்போதைய போட்டியாளர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ரித்விகா வென்று முதலிடம் பிடித்தார். ஐஸ்வர்யா இரண்டாம் இடம் பிடித்தார். போட்டியில் வெற்றி பெற்ற ரித்விகாவுக்கு வெற்றிக்கோப்பையும், 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

 
சமீபத்தில் வைஷ்ணவி நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் சமீபத்தில் வைஷ்ணவி வித்யாசமான ஆடை என்ற பெயரில் பார்ப்பதற்கு ஸ்பைடர் மேன் உடையில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்தது சிரிப்பதா, இல்லை கலைப்பதா என குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

vaishnavi


Advertisement