சினிமா Bigg Boss

கசிந்தது தகவல்.. பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்தவாரம் வெளியேறிய நபர் இவர்தான்.. யார் தெரியுமா.?

Summary:

இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

16 போட்டியாளர்கள், 2 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட பிக்பாஸ் தமிழ் சீசன் நான்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கமான சீசன்களை போல் இந்த சீஸனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் வழக்கம்போல் காதல் கதைகள் இல்லாமல் பாலா - ஆரி இருவரையும் வைத்து ஒரு மினி விக்ரம் வேதா படம்போல் இந்த சீசனை நகர்த்தியுள்ளது விஜய் டிவி. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் நான்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளநிலையில் இந்தமுறை பிக்பாஸ் பட்டத்தை யார் வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும் தற்போது 7 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்நிலையில், 7 பேரும் இந்த வார நாமினேஷனில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 7 பேரில் இருந்து ஒருவர் இந்த வாரம் வெளியேற்றியுள்ளார். ஏற்கனவே சோம், பாலா, ஆரி ஆகியோர் இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுவிட்டனர்.

இந்நிலையில் மற்ற போட்டியாளர்களை விட, குறைவான வாக்குகளை பெற்று ஷிவானி இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 19 வயதே ஆன ஷிவானி மற்ற போட்டியாளர்களுக்கு இணையாக, சிறப்பாக விளையாடி இத்தனை நாட்களாக பிக்பாஸ் வீட்டில் இருந்ததே பெரிய விஷயம் என ஷிவானி ரசிகர்கள் அவரை கொண்டாடிவருகின்றனர்.


Advertisement