பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத புது பிரபலம்! யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத புது பிரபலம்! யார் தெரியுமா?


bigg-boss-tamil-season-three-contestant-list

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ஒன்றுதான் பிக் பாஸ். இரண்டு சீசன்கள் இதுவரை முடிவு பெற்றுள்ள நிலையில் வரும் ஜூன் 23 முதல் சீசன் மூன்று தொடங்க உள்ளது. கடந்த இரண்டு சீசன்களையும் தொடர்ந்து மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார் நடிகர் கமலகாசன்.

முதல் சீசன் மாபெரும் வரவேற்பை பெற்றாலும் இரண்டாவது சீசன் எதிர் பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இதனால், சீசன் மூன்று மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்க உள்ளது. ஓகே ஓகே பட நடிகை மதுமிதா பிக் பாஸ் வீட்டிற்கு செல்வது உறுதியாகிவிட்ட நிலையில் மற்ற பிரபலங்கள் குறித்து எந்த ஒரு தகவல்களும் இல்லை.

இந்நிலையில் இசைக்கலைஞர் மோகன் வைத்யா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

bigg boss tamil