சினிமா

விரைவில் பிக்பாஸ் சீசன் 4 தமிழ்: கசியத் தொடங்கிய நடிகைகளின் பெயர்கள்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Summary:

Bigg boss tamil season 4 latest updates and contestants list

கொரோனா தொற்று பரவல் காரணத்தால் இந்த ஆண்டு தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடத்தப்படுமா என கேள்விகள் எழுந்தநிலையில் தமிழில் பிக் பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
கடந்த மூன்று ஆண்டுகளாக ஜூன் மாதம் தொடங்கி 100 நாட்கள்  நடைபெறும் பிக்பாஸ் போட்டி இந்த ஆண்டு கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் கொரோனா பிரச்சனை சரியாகாதநிலையில் இந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 4 ஒளிபரப்படுமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பிக்பாஸ் போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் முதல் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் என மூன்று மாதங்களில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் விஜய் டிவி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சீசனையும் நடிகர் கமல்தான் தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்களின் உத்தேச பட்டியலும் வெளியாகியுள்ளது. அதில், நடிகை சுனைனா, அதுல்யா ரவி, நடிகை கிரண், குக் வித் கோமாளி புகழ் ரம்யா பாண்டியன், வித்யூலேகா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


Advertisement