சினிமா Bigg Boss

பிக்பாஸ் சீசன் 4 தமிழ்: முதல் அதிகாரபூர்வ வீடியோவை வெளியிட்டது விஜய் தொலைக்காட்சி.! தொகுப்பாளர் யார் தெரியுமா..?

Summary:

Bigg boss Tamil Season 4 first promo video

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 குறித்த அதிகாரப்பூர்வ தகவலை முதல் முறையாக வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்று பிக்பாஸ். மூன்று சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில் இந்த ஆண்டு தொடங்கவிருந்த பிக் பாஸ் சீசன் 4 கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

பிக்பாஸ் ரசிகர்களுக்கு ...

இந்நிலையில் விரைவில் பிக் பாஸ் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. அதேநேரம் சமீபத்தில் நடிகர் கமல் வெண் தாடியுடன் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் சீசன் 4 விரைவில் வர இருப்பதை உறுதி செய்தது.

ஆனால் பிக்பாஸ் சீசன் 4 குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலையும் விஜய் தொலைக்காட்சி வெளியிடவில்லை. இந்நிலையில் முதல் முறையாக பிக்பாஸ் சீசன் 4 குறித்த அதிகாரபூர்வ தகவலை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 குறித்த முதல் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ள விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் சீசன் 4 விரைவில் என பதிவிட்டுள்ளது. மேலும் ப்ரோமோ வீடியோவில் கமல் கொரோனா வைரஸ் குறித்து பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் நடிகர் கமல்தான் சீசன் 4 கையும் தொகுத்து வழங்க உள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 எப்போது வரும் என காத்திருந்த பிக்பாஸ் ரசிகர்களுக்கு இந்த தகவல் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement