ஆஹா..! இவங்க 2 பேரும் வர்றாங்களா..? இவங்க 2 பேரும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தாலே போதும்..! வீடு களைகட்டும்..!

ஆஹா..! இவங்க 2 பேரும் வர்றாங்களா..? இவங்க 2 பேரும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தாலே போதும்..! வீடு களைகட்டும்..!


Bigg boss tamil season 4 expected contestant list

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் தொடங்க போகிறது என்றாலே அதில் யாரெல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்ற ஒரு உத்தேச பட்டியல் எப்போதுமே இணையத்தில் வைரலாக தொடங்கிவிடும்.

 அந்த வகையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து இந்தமுறை யாரெல்லாம் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ள போகிறார்கள் என ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. முன்னதாக நடிகை சுனைனா, அதுல்யா ரவி, கிரண் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது.

விஜய் டிவி பிரபலம் நீயா நானா கோபிநாத் அவர்களின் பெயர் கூட இந்த பட்டியலில்  இடம் பெற்றது. இது ஒருபுறம் இருக்க தற்போது மேலும் இருவரின் பெயர்கள் அடிபட்டுவருகிறது. இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தால் பிக்பாஸ் வீடே களைகட்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.

Bigg boss

யார் அந்த இருவர்? ஒருவர் சூர்யா தேவி, மற்றொருவர் டிக் டாக் புகழ் இலக்கியா. வனிதா - சூர்யா தேவி இடையே நடக்கும் வார்த்தை போர் சமூக வலைத்தளங்களில் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. இப்படி இருக்க அவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தால் பிக்பாஸ் வீடே களைகட்டும் என கூறப்படுகிறது.

Bigg boss

அதேபோல் டிக்டாக்கில் எந்த அளவுக்கும் கவர்ச்சியில் கீழிறங்கி வீடியோக்களை போட முடியுமோ அந்த அளவுக்கு தனது கவர்ச்சி வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர்தான் இந்த டிக் டாக் புகழ் இலக்கியா. தற்போது டிக் டாக் செயலியும் தடைதடை செய்யப்பட்டுள்ளதால் எப்படியாவது தன் புகழை வைத்து பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து விடவேண்டும் என அவர் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தால் பிக்பாஸ் வீடு தினமும் போர்களமாகவும், குதூகலமாகவும் இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.