சினிமா Bigg Boss

டபுள் மீனிங் வார்த்தை! பிக்பாஸ் போட்டியாளர்களிடம் வசமா சிக்கிய நடிகர் கமல்.! வைரலாகும் ப்ரோமோ வீடியோ.

Summary:

பிக்பாஸ் சீசன் நான்கு 7 வது நாளிற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.

பிக்பாஸ் சீசன் நான்கு 7 வது நாளிற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.

கடந்த மூன்று சீசன்களாக மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி இன்றுடன் 7 நாட்களை நெருங்கியுள்ளது. வழக்கம்போல் இந்த சீசனிலும் சண்டை, சமாதானம், மோதல் என பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் வாரத்தின் இறுதியில் நடிகர் கமல் போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்தவகையில் இன்று போட்டியாளர்களை சந்திக்கிறார் கமல். அப்போது இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து பேசியுள்ள கமல், ஜனநாயக முறைப்படி இந்த வாரத்திற்கான தலைவரை தேர்வு செய்ய போட்டியாளர்களை அழைக்கிறார்.

மேலும் ஷிவானி, சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா மூவரையும் தலைவருக்கான போட்டியாளராக நிறுத்தி, அவர்களில் யாருக்கு பெரும்பான்மை உள்ளது எனவும் சோதிக்கிறார் கமல்.

அதில், ஷிவானிக்கு ஆதரவு தரும் நபர்கள் கைதூக்குங்கள் என கூற, மூன்று பேர் மட்டுமே ஆதரவு தெரிவிக்கின்றனர். சுரேஷ் சக்ரவர்த்தியின் பெயரை கூறும்போது பெரும்பாலானோர் கை  தூங்குகின்றனர். இதனை பார்த்த கமல், நன்கு யோசித்து பின்னர் வாக்களியுங்கள். போட்டுவிட்டு பின்னர் யோசிக்க கூடாது என டபுள் மீனிங்கில் பேசுகிறார்.

பின்னர் சுதாரித்துக்கொண்டு, தான் டபுள் மீனிங்கில் பேசுவதாக நினைக்க வேண்டாம் என அவரே வாய்யை விட்டு சிக்கிக்கொள்கிறார். தற்போது இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.


Advertisement