வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
தெறிக்கவிடும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் லிஸ்ட்.! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்.!
விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடர்களில் ஓன்று பிக்பாஸ். மூன்று சீசன்களை கடந்துவிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பும், வரவேற்பும் கூடிக்கொண்டே போகிறது.
அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 4 இன்னும் சில மாதங்களில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் சீசன் வரப்போகிறது என்றாலே அதில் யாரெல்லாம் போட்டியாளராக கலந்துகொள்ள போகிறார்கள், யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போறது இப்படி பல கேள்விகளும், அது சார்ந்த பதில்களும் இணையத்தில் உலா வர ஆரம்பித்துவிடும்.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் நான்கில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்துகொள்ளப்போகிறார்கள் என்ற பட்டியல் ஓன்று வெளியாகியுள்ளது. அதில், நடிகை ரம்யா பாண்டியன், விஜே மணிமேகலை நடிகை சுனைனா, அமிர்தா, அதுல்யா ரவி, கிரண் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இவர்கள் அனைவரும் பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்துகொள்வது உறுதியாகிவிட்டதாகவும், விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.