கடைசி நேரத்தில் வெளியே கசிந்த தகவல்! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவர்தானாம்!
கடைசி நேரத்தில் வெளியே கசிந்த தகவல்! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவர்தானாம்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்போகிறார் என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த மூன்று சீசன்களை போன்று இந்த சீசனிலும் சண்டை, சமாதானம், அழுகை என பிக்பாஸ் வீடு மிகவும் காரசாரமாக உள்ளது.
போட்டியின் இரண்டாவது வாரம் நடிகை ரேக்கா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனிடையே தொகுப்பாளினி அர்ச்சனா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் வந்தார். மீண்டும் 16 பேருடன் நடந்துவந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் பாடகர் ஆஜித் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்ட இருந்தநிலையில் அவர் தன்னிடம் இருந்த எவிக்சன் ப்ரீ பாஸை வைத்து தப்பித்துக்கொண்டார்.
இந்நிலையில் இந்த வார நாமினேஷனில் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் உள்ளிட்ட 11 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த 11 பேரில் பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ரியோ, ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகிய 5 பெரும் அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீதமுள்ள போட்டியாளர்களில் பாடகர் வேல்முருகன் மற்றும் ஆஜித் ஆகிய இருவர் மட்டும் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதாகவும், இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பாடகர் வேல்முருகன்தான் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.