சினிமா

பிக் பாஸ் சுஜா வருணியோட கல்யாண பத்திரிகை டிசைன் பாத்திங்களா? இங்க பாருங்க!

Summary:

Bigg boss suja varunee marriage invitation

தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் போன்ற படங்களில் நடித்தவர் சுஜா வருணி. பல திரைப்படங்களில் ஒரு சில பாடல்களுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளார் சுஜா. வாத்தியார் திரைப்படத்தில் இவர் ஆடிய என்னடி முனியம்மா பாடல் இன்றுவரை மிகவும் பிரபலமாக உள்ளது.

இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் சுஜா வருணி. உள்ளே சென்றதில் இருந்தே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றார் சுஜா.

ஒருவழியாக போட்டியின் இறுதிவரை சென்றார் சுஜா. அவர் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் சிவாஜி வீட்டு மருமகளாகப்போகிறார் என்ற செய்திகள் இணையத்தில் தீயாய் பரவியது. இவரும் சிவாஜி கணேஷனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ்வும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டது இணையத்தில் பரவி வைரலானது.

இதையடுத்து சுஜாவருணியின் பிறந்த நாளானன்று அவரது காதலர் திருமண தேதியை வெளியிட்டிருந்தார். அதில், 11 வருடக் காதல் இப்போது திருமணத்துக்கு வந்துவிட்டது. நம்முடைய கனவு நனவாகும் தருணம் நெருங்கிவிட்டது. எனக்கும் சுஜாவுக்கும் நவம்பர் 19-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இந்த பிறந்தநாளில் இதை சொல்லிக் கொள்கிறேன். சாகும் வரைக்கும் பிரியாமல், அன்புடன் இருப்போம். என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தங்களது திருமண அழைப்பிதழை சுஜா வருணி மற்றும் அவரது காதலர் சிவகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அந்த அழைப்பிதழ் டிஸ்னி ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர்களது காதல் கதை, டிஸ்னி கதைகளில் வருவது போல் கூறப்பட்டுள்ளது. 


Advertisement