சினிமா பிக்பாஸ்

ஷெரினிடம் வலிந்து விழுந்த கவின்! சாக்க்ஷியின் நக்கலான கமெண்டை பாருங்க.!

Summary:

Bigg boss shakshi tweets about kavin

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. கவின் - லாஷ்லியாவின் காதல் விளையாட்டு ரசிகர்களை வெறுப்பேற்றிக்கொண்டிருந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஷ்லியாவின் குடும்பம் அதற்கு சரியான முற்றுப்புள்ளி வைத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

லாஷ்லியாவின் குடும்பம் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளாத கவின் மீண்டும் லாஷ்லியவை சீண்ட முயற்சிக்க அதற்கு இடம் கொடுக்காமல் நழுவி செல்கிறார் லாஷ்லியா. இதனால் லாஷ்லியவை வெறுப்பேற்ற நேற்றைய நிகழ்ச்சி முழுவதும் ஷெரினிடம் வலிந்து விழுகிறார் கவின்.

இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் இந்த சீஸனின் முன்னாள் போட்டியாளரும் ஏற்கனவே கவினை காதலித்தவருமான பிக்பாஸ் புகழ் ஷாக்க்ஷி. இதுபற்றி அவர் கூறுகையில் இதுமட்டும்தான் நடக்காமல் இருந்தது தற்போது அதுவும் நடந்துவிட்டது என்பதுபோல் கமெண்ட் செய்துள்ளார்.

அதற்கு பதிலளித்த ரசிகர்கள் உங்கள் வேதனை எங்களுக்கு புரிகிறது என சொல்ல, கவின் விஷயத்தில் நான் நிராகரிக்கபட்டதாக என்னவில்லை மாறாக காப்பற்றபட்டதாக உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.


Advertisement