
Bigg boss seran lashliya issue
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. 90 நாட்களை கடந்துள்ள சீசன் மூன்று இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைய உள்ளது. 16 பேரில் 10 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி தற்போது 6 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். இவர்களில் யார் பிக்பாஸ் படத்தை வெல்லப்போவது என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் ப்ரூட்டி காலர் ஒருவர் சேரனிடம் ஒரு கேள்வி எழுப்பினார். அதில், உங்கள் உண்மையான மகள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்தபோது உங்களுக்கு நாங்கள் மட்டும்தான் மகள்கள், லாஷ்லியாவை இனி நீங்கள் மகள் என்று கூறக்கூடாது என அறிவுரை வழங்கும்போது நீங்கள் ஏன் அது பற்றி அவரிடம் விளக்கம் கொடுக்காமல் அமைதியாக இருந்தீர்கள் என கேட்டார்.
அதற்கு பதில் கூறிய சேரன், அடுத்த கணமே தனது மகளிடம் நான் விளக்கம் கொடுத்துவிட்டேன் என்றும் அந்த காட்சிகள் உங்களுக்கு கட்டப்படாமல் இருந்திருக்கலாம் எனவும் கூறினார். அந்த ப்ரூட்டி கலர் போலத்தான் அனைவர்க்கும் இந்த சந்தேகம் இருந்தது.
முக்கியமான காட்சியை விஜய் டிவி ஒளிபரப்பாமல் கட் செய்ததால் ரசிகர்களுக்கு இருந்த சந்தேகம் நேற்றைய நிகழ்ச்சி மூலம் தெளிவுக்கு வந்துள்ளது.
Advertisement
Advertisement