சினிமா பிக்பாஸ்

போர்க்களமாக மாறிய பிக்பாஸ் இல்லம். மாறி மாறி சண்டை போட்டுக்கொண்ட வனிதா - கவின்.

Summary:

Bigg boss sema fight with vanitha and kavin

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 70 நாட்களை கடந்துவிட்ட சீசன் 3 இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை.

இந்நிலையில் இதுவரை நடந்த எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு காதல், சர்ச்சை, சண்டை, விட்டுக்கொடுத்தல் என பிக்பாஸ் இல்லம் வித்தியாசமாக செல்கிறது. தர்சன் பிக்பாஸ் படத்தை வெல்லவேண்டும் என்பதற்காக கவின், சாண்டி, முகின், மற்றும் ஷெரின் ஆகியோர் விட்டுக்கொடுக்க தயாராகிவிட்டனர்.

இன்று இந்த விவகாரம் விஸ்பரூபம் எடுத்து பிக்பாஸ் இல்லத்தில் கடும் சண்டையாக மாறியுள்ளது. முதலில் வனிதா - சாண்டி இடையே இதுகுறித்து சண்டை ஏற்பட்டது. அதன்பின்னர் கவின் - வனிதா இடையே இதுகுறித்து நீண்டநேரம் விவாதம் ஏற்பட்டு பிக்பாஸ் இல்லமே போர் கலமாக மாறியது.


Advertisement