சினிமா

பிக் பாஸ் பைனலுக்கு போகப்போறது இவங்கதானம்! ட்விஸ்ட் வைக்கும் பிக் பாஸ்!

Summary:

Bigg boss season two first finalist

பிக் பாஸ் சீசன் இரண்டு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் மிகவும் பரபரப்பாக செல்கிறது. வாரம் ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார். அந்த வகையில் இந்த வார எலிமினேஷனில் ஐஸ்வர்யா, விஜயலக்சுமி, மும்தாஜ், ரித்விகா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் சீசன் ஒன்றின் போட்டியாளர்கள் சினேகன், காயத்ரி, வையாபுரி, ஆரத்தி,சுஜா ஆகியோர் பிக் பாஸ் சீசன் இரண்டின் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். மேலும் முதல் சீஸனின் வெற்றியாளர் நடிகர் ஆறவும் இறுதியாக வீட்டிற்குள் வந்துள்ளார்.

இந்நிலையில் சீசன் இரண்டு போட்டியாளர்களுக்கு ஒரு போட்டி நடத்த படுகிறது. அந்த போட்டியில் வெற்றிபெறும் நபர் சீசன் இரண்டின் இறுதிக்கு நேரடியாக தேர்வுசெய்யப்படுவர் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். இந்த போட்டியில் இந்தவாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களும் பங்கேற்கின்றனர்.

ஏற்கனவே எலிமினேஷனுக்காக மக்கள் வாக்களிக்க தொடங்கிவிட்ட நிலையில் இந்த டாஸ்கில் வெற்றி பெரும் நபர் வெளியேற்றப்படுவாரா அல்லது இறுதி போட்டிக்கு தேர்வுசெய்யப்படுவாரா என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.


Advertisement