பிக்பாஸ் சீசன் 3: ஒருநாளைக்கு 25 லட்சம் சம்பளமா? அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்!

பிக்பாஸ் சீசன் 3: ஒருநாளைக்கு 25 லட்சம் சம்பளமா? அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்!



Bigg boss season three telungu actor asked 25 lakhs salary per day

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  அதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக்பாஸ்.  சீசன் 1 மற்றும் 2 இரண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. 

பிக்பாஸ் முதல் சீசனில் நடிகர் ஆரவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றினார்.  இரண்டாவது சீசனில் நடிகை ரித்திகா பிக் பாஸ் பட்டத்தை கைப்பற்றினார்.  தற்போது சீசன் 3 கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார் யார் என்பது தற்போது வரை தெரியவில்லை. 

Bigg boss

தமிழில் ஒளிபரப்பாவது போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 3 இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளது.  தெலுங்கு பிக் பாஸ் சீசன் 1 மற்றும் 2 ஐ பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் நானி தொகுத்து வழங்கினர்.

தற்போது பிக் பாஸ் சீசன் 3 ஐ தொகுத்து வழங்க பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா விடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

Bigg boss

இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 இதில் கலந்து கொள்ள ஒரு நாளைக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார் பிரபல தெலுங்கு காமெடி நடிகர் சுனில்.  இது பற்றிக் கூறியுள்ள அவர் பிக் பாஸ் போட்டியில் கலந்துகொள்ள தனக்கு ஆர்வம் இருப்பதாகவும் ஆனால் ஒரு நாளைக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளமாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இவரின் கோரிக்கையை ஏற்குமா தொலைக்காட்சி நிறுவனம்? பொறுத்திருந்து பார்ப்போம்.