அட்ராசக்க.. பட்டையை கிளப்பப்போகும் பிக்பாஸ் சீசன் 7.. எப்போது களமிறங்கும்?.. ஆவலில் ரசிகர்கள்.!! 



Bigg boss Season 7 Tamil

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் முடிந்துவிட்ட நிலையில், பிக்பாஸ் 7-வது சீசன் எப்போது தொடங்கும்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. 

பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து தற்போது வரையிலும் சர்ச்சைகள், பிரச்சனைகள் என பல இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொண்ட போட்டியாளர்கள் திரைவட்டாரத்தில் சென்று சேர்வர். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசன் பணியாற்றி வருகிறார். 

Bigg boss

கடந்த ஆறு சீசன்களும் இவரே தொகுப்பாளராக இருந்தார். முதல் இரண்டு சீசன்களை தவிர்த்து பிற நான்கு சீசன்களும் மக்களிடம் வரவேற்பு குறைவாக பெற்றாலும், ஐந்தாவது மற்றும் ஆறாவது சீசன் நல்ல வரவேற்பு பெற்றதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 7 தொடர்பாக பேச்சுக்கள் எழுந்துள்ளது. உலகக்கோப்பை போட்டி முடிந்த பின் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தற்போது புதிய டீம் ஒன்று தயாராகி இருப்பதாகவும், அதனை நிகழ்ச்சி குழு ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.