பிக்பாஸ் சீசன் 4: வெளியே கசிந்த ஒரு போட்டியாளரின் பெயர்! யார் தெரியுமா அது?

பிக்பாஸ் சீசன் 4: வெளியே கசிந்த ஒரு போட்டியாளரின் பெயர்! யார் தெரியுமா அது?


Bigg Boss Season 4 Vijay Tv Rakshan name leaked

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷன் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டிற்கான பிக்பாஸ் தொடர் விரைவில் தொடங்கப்படும் என விஜய் தொலைக்காட்சி சமீபத்தில் அறிவித்திருந்தது.

மேலும் பிக் பாஸ் நான்கு நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆவலை மேலும் அதிகரித்துள்ளது. இதனிடையே இந்த முறை பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்த வண்ணம் உள்ளது.

Bigg boss season 4

முன்னதாக நடிகைகள் சுனைனா, ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அந்த தகவலை மறுத்துவிட்டனர்.

இதனிடையே நடிகை சனம் ஷெட்டி, ரியோ, ஷாலு ஷம்மு, அமிர்தா ஐயர் ஆகியோரது பெயர்கள் தற்போது பிக் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இது ஒருபுறம் இருக்க கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான விஜய் தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

சமூகவலைத்தள பக்கத்தில் ரக்‌ஷன் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட, ரசிகர் ஒருவர் இப்போதெல்லாம் உங்களை விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்க்க முடியவில்லையே என்று கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த ரட்சன், விரைவில் ஸ்பெஷலான ஒன்றில் வருகிறேன் என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதைத்தான் ரக்‌ஷன் இவ்வாறு கூறியுள்ளதாக நெட்டிசன்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.