சினிமா Bigg Boss

பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் ரம்யா பாண்டியன், ஷிவானி! பற்றவைத்த சம்யுக்தா! பதறும் ரசிகர்கள்.

Summary:

பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியற்றவர்கள் என்ற பட்டியலில் நடிகை ரம்யா பாண்டியன், ஷிவானியின் பெயர்களை பரிந்துரைத்துள்ளார் சம்யுக்தா.

பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியற்றவர்கள் என்ற பட்டியலில் நடிகை ரம்யா பாண்டியன், ஷிவானியின் பெயர்களை பரிந்துரைத்துள்ளார் சம்யுக்தா.

பிக்பாஸ் சீசன் 4:
16 பிரபலங்களுடன் தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் நான்கு 5 நாட்களை நெருங்கியுள்ளநிலையில் போட்டி தற்போதில் இருந்தே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே, சண்டை, வாக்குவாதம் ஆகியவற்றிற்கு பஞ்சம் இருக்காது.

நாமினேஷன் வழிமுறை:
அந்த வகையில் இந்த சீசனும் முதல் நாளில் இருந்தே சண்டை, வாக்குவாதங்களுடன் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் முதல் வாரத்திற்கான நாமினேஷன் தற்போது தொடங்கியுள்ளது. தற்போது பிரபலமாக இருக்கும் இவர்கள், தாங்கள் பிரபலமாவதற்கு முன் பட்ட கஷ்டங்களை மற்ற போட்டியாளர்கள் முன் கூறவும், அதன் அடிப்படையில் இந்த வாரத்திற்கு நாமினேஷன் செய்யப்படும் போட்டியாளர்களை தேர்வு செய்யவேண்டும் என பிக்பாஸ் கூறியிருந்தார்.

அந்த வகையில் நடிகை ரேகா, கேப்ரில்லா, சனம் ஷெட்டி, சம்யுக்தா ஆகியோரின் பெயர்கள் ஏற்கனவே நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தற்போது மீதமுள்ள போட்டியாளர்கள் தங்கள் கதையை கூறியபிறகு இந்த வீட்டில் இருக்க தகுதியற்ற நான்கு பேர் யார் என போட்டியாளர்களை தேர்வு செய்ய அழைக்கிறார்.

இந்தவார நாமினேஷன்:
அதன்படி சக போட்டியாளர்களிடன் கலந்தாலோசித்தபிறகு, ஆஜித், ஷிவானி, ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய நான்கு பெரும் இந்த வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் எனவும், மற்றவர்கள் பட்ட கஷ்டங்களை விட இவர்கள் கஷ்டங்கள் பெரிதாக இல்லை என கூறி இவர்கள் நான்கு பேரையும் நாமினேட் செய்துள்ளார் சம்யுக்தா.

கவலையில் ரசிகர்கள்:
சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி இருவரும் முதல் வாரத்திலையே நாமினேட் செய்யப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement