லாஸ்லியாவை பற்றித்தான் கமல் இப்படி கோபமாக பேசுகிறாரா? வெளியான புது ப்ரோமோ வீடியோ.

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் இதை முறை பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். மேலும், 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.
மேலும் இந்த வாரம் சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா உள்ளிட்டவர்கள் புதிதாக பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினர்களாக வந்துள்ளனர். அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு நேற்று ஒருசில விருதுகளை கொடுத்தனர். அதில் பச்சோந்தி என்ற விருதை லாஷ்லியாவுக்கு கொடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த லாஷ்லியா அந்த விருதை தூக்கி எறிந்தார்.
லாஷ்லியாவின் இந்த செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் போட்டியாளர்களை சந்திக்க கமல் இன்று வருகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகிய புதிய ப்ரோமோவில் வெற்றி முக்கியம் தான். எப்படியாவது வெற்றி பெறுவேன் என்பது ஒரு முறை, இப்படி தான் வெல்வேன் என லட்சியத்தோடு வெல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இரண்டாவது தான் சிறந்தது என கூறியுள்ளார் கமல்.
லாஷ்லியா நேற்று செய்ததை மனதில் வைத்துதான் கமல் இப்படி கூறுகிறாரே என குழப்பத்தில் உள்ளனர் பார்வையாளர்கள்.
#Day76 #Promo1 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/JlztKMMK3q
— Vijay Television (@vijaytelevision) September 7, 2019