இரவோடு இரவாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் சரவணன்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இரவோடு இரவாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் சரவணன்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!


Bigg boss saravanan eliminated from house

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 43 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இதுவரை 5 பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு யாரும் எதிர்பாராத வகையில் பருத்திவீரன் சித்தப்பு சரவணனை பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார் பிக்பாஸ்.

தான் பேருந்தில் பயணம் செய்யும் போது பெண்களை உரசியுள்ளதாக சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இதற்கு அவர் மீது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து பிக்பாஸ் அவரை மன்னிப்பு கேட்க கூறியிருந்தார். இந்த சம்பவம் நடந்து ஒருசில நாட்கள் ஆகிவிட நிலையில் நேற்று இதே காரணத்திற்காக சரவணனை பிக்பாஸ் வீட்டிலில் இருந்து வெளியேற்றியுள்ளார் பிக்பாஸ்.

bigg boss tamil

இதுவரை நடந்த இரண்டு சீசன்களில் இதுபோன்று பிக்பாஸ் யாரையும் வீட்டை விட்டு அனுப்பியதே இல்லை. ஆனால் சரவணன் முதல் முறையாக பிக்பாஸ் வீட்டை விட்டு விதியசமான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளார்.