சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் மதுமிதாவின் தற்கொலை முயற்சியை அடுத்து சாண்டியின் கையிலும் கட்டு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

Bigg boss sandi vanidha issue

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக செல்கிறது. இதுவரை 55 நாட்கள் முடிந்துள்ள நிலையில் பிக்பாஸ் பட்டத்தை இந்த முறை யார் வெல்ல போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் வனிதாவின் ரீ என்ட்ரிக்கு பிறகு பிக்பாஸ் இல்லம் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இல்லமல் நகர்கிறது.

இதன் விளைவாக நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களை சந்திக்க வந்த கமல் கடந்த வாரம் நடந்த சண்டை குறித்து விசாரித்து வந்தார். அப்போது டான்ஸ் மாஸ்டர் சாண்டி தனது கையில் இருந்த கட்டினை கமலிடம் காண்பித்தார்.

பிக்பாஸ் இல்லத்தில் நடைபெறும் சண்டையால் தனக்கு தெம்பு இல்லை என்றும் அதனால் தனுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாகவும் சாண்டி தெரிவித்துள்ளார். முக்கோண காதல் கதையில் பிசியாக சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் இல்லம் வனிதாவின் வருகைக்கு பின்னர் இப்படி ஆகிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement