மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
அசீம் ரெட் கார்டுக்கு தகுதியா?... முகம்காண்பித்த போட்டியாளர்கள்., கொளுத்திப்போடும் கமல்.!
தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சீசனில் இலங்கை செய்தி வாசிப்பாளர் ஜனனி, டிக் டாக் பிரபலம் ஜி.பி முத்து, பாடகர் அசல் கோலார், நடன இயக்குனர் ராபர்ட், நடிகை மைனா நந்தினி, ஆய்ஷா, விக்ரமன் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர். நடப்பு ஆண்டுக்கான பிக்பாஸ் தொடரை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, 2ம் வாரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பல டாஸ்குகளில் அவர்கள் முழுவீச்சுடன் களமிறங்கி பங்கேற்று வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அஸீம் விக்ரமனை டாஸ்கின் போது கடுமையாக சாட்டியிருந்தார். மேலும், அவரின் அரசியல் பணி குறித்து பேசியிருந்தார்.
இது கடுமையான கொந்தளிப்பை அவரின் ஆதரவாளர்களிடையே ஏற்படுத்தவே, தற்போது சனிக்கிழமையான இன்று கமல் ஹாசன் போட்டியாளர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கி வருகிறார். அதன்படி, வீட்டில் இருப்பவர்களிடம் ரெட் கார்ட் யாருக்கு கொடுக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்க, பெரும்பாலானோர் அஸீமின் செயல்பாடுகளை தெரிவித்து அவருக்கு ரெட் கார்ட் வழங்குகின்றனர்.